திருமதி புலம்பல்

முடியலே !
முடியலே !
என்னாலே
முடியலே !


செய்தித்தாள்
கணவனை
செல்லமாய்
மாற்ற முடியலே !

சுறு சுறுப்பாய்
இயங்க
வைக்கவும்
முடியலே !

அடுப்பங்கரையை
விடவும்
முடியலே !
விடாம இருக்கவும்
முடியலே !

காலையும்
மாலையும்
கணக்கு தவறாம
கச்சிதமா வந்து

நாள் காட்டி
வருடம் காட்டி
வயதையும் கூட்டுதே!

முடியலே
முடியலே
என்னாலே
முடியலே !

பள்ளிக்கு செல்லும்
செல்வங்களுக்கு
பணிவிடை செய்து
பம்பரமாய்
சுழன்று சுழன்று
அயர்ந்து
அபீட்டாகின்றேனே !

பீ டி உஷாவை
தோற்கடிக்க
மராத்தான்
ஓட்டம் ஓடுகின்றேன்
ஓடவும் முடியலே
ஒடாம இருக்கவும் முடியலே !

கண்ணே
மணியேன்னு
கொஞ்சி
சிலை வைக்காட்டியும்

என் புலம்பலை
கேட்டாவது
எனக்கு ஒரு
விருது கிடைக்காதா ?

முடியலே !
முடியலே !
என்னாலே முடியலே!

புலம்பாம
இருக்கவும்
முடியலே!
புலம்பவும்
முடியலே !

புலம்பல்
வியாதிக்கு
தீர்வும்
கண்டு பிடிக்க
முடியலே !

முடியலேன்னு
சொல்லாம
இருக்கவும்
முடியலே !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (29-Jul-14, 10:38 pm)
Tanglish : thirumathi pulambal
பார்வை : 89

மேலே