உன்னால் வாழ்கிறேன்

என் கனவுகளின் தூரம் கொண்டு
கரைந்தே நானும் தேய்ந்தேனடி..
உன் நினைவுகளின் பக்கம் வந்து
வாழ்ந்தே நானும் மாய்கிறேனடி..
நிஜத்தில் உன் விழிகண்டு
குளிர் காணவே...
கனவில் உன் முத்தமும்
என்னை சுடுகிறதடி..கண்ணே
உன் புன்னகைக்குள் நான்
தொலைந்ததால் இன்று..
தனிமையில் என் புன்னகைத்தேடி
அலைகிறது என் கண்ணீர் துளிகள்...
நீ என்னுள் வாராய் என்றே
மரணம் தேடாமல்..
உன் நினைவுகளோடு
இன்றும் வாழ்கிறேன் பெண்ணே..!!

..கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (29-Jul-14, 11:12 pm)
Tanglish : unnaal vaazhkiren
பார்வை : 131

மேலே