எப்படி எப்படி என்னை ஈர்த்தாலோ?

மீண்டும் ஒரு பார்வை
என்னை துரத்தியதே துரத்தியதே.
மீண்டேன் என்று நினைக்கும் முன்பே
வருத்தியதே உடல் வருத்தியதே.
இந்த வலியை என்னென்று சொல்வேன்?
மொழி மறந்து நானெங்கு செல்வேன்?
அவள் பிரிவில் நானென்றும் உடைந்தேன்
முகமிழந்தேன்..
ஏ! எப்படி எப்படி என்னை ஈர்த்தாலோ?
ஒரு பார்வையில் என்னுயிர்
பறித்திட பார்த்தாலோ

அறியா ஒரு வயதில்
விடை தெரியாதொரு நிலையில்
அழகென்னை மயக்கியதே
நான் மயங்கி விட்டேன்.
தெரிந்தே இதயம் இழந்தேன்
உயிர் காற்றை நுகர மறந்தேன்
அவள் நினைவில் என் உயிர் வாழ்ந்தேன்
சிலை.யா.. நேன்.
இதழ் உதிரும் நேரம் சில துன்பம்
அவள் பார்வை விலகும், வரை இன்பம்
அவள் போன பின்னே
என் இதயம் வெற்றிடமே.
ஏ! எப்படி எப்படி என்னை ஈர்த்தாலோ
ஒரு பார்வையில் என்னுயிர்
பறித்திட பார்த்தாலோ?

எழுதியவர் : கவிசதிஷ் (10-Jun-10, 1:53 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 656

மேலே