முகநூலின் முகம் - குமரி

என்னோடு...உன்
பொழுதெல்லாம் செலவழித்து
பழுதாகிறது நேரம்..!
பொன் போன்ற காலத்தை
புண்ணாக்கி செல்கின்றாய்..!
உறவாடும் நாழிகைக்கு
ஊதியம்தான் யார் தருவார் ..?
துயில் விழித்து
நலம் தொலைத்து
துணை தேடும் நண்பர்களே..!
இறுதியில் இழப்பு உனக்கு
இயலாது துணைவர எனக்கு...!
முகநூலால் ஜெயித்தவர் யார்..?
முதலில் உன் வாழ்க்கையை பார்...!
பதிவில் விருப்பம் (LIKE) எதிர்பார்த்து
பாதி வாழ்கையை (LIFE) தொலைக்காதே..!

இப்படிக்கு
உன் நலம் விரும்பும் முகநூல்..!

எழுதியவர் : குமரி பையன் (31-Jul-14, 1:09 pm)
பார்வை : 122

மேலே