ஞாபகம் இல்லையோ என் காதலி 555

என்னவளே...
என்னை கடந்து போன நாட்களை
இன்று நினைத்து பார்கிறேன்...
என் இதயமென்னும் புத்தகத்தை
திறந்து பார்கையில்...
தொலைந்து போன
ஞாபகங்கள்...
நான் தொலைத்த
நிமிடங்கள்...
என் கண்முன்னே
பசுமையாக...
உன்னை காணாமல்
கண்ணீரில் தத்தளித்த...
என் விழிகள்...
உன் வரவுகளுக்காக
காத்திருந்து சோர்ந்து போன...
என் கால்கள்...
நினைவிலும் கனவிலும்
உன்னையே சுற்றி வந்த...
என் நினைவுகள்...
உன் வார்த்தைகளை
ஒவ்வொன்றையும்...
வேதமாக நினைத்த
என் நெஞ்சம்...
உனக்கு ஓர் காதல் கடிதம்
எழுத நினைத்து...
கசக்கி எறிந்த
பல காகிதங்கள்...
உனக்கு பரிசளிக்க நான் பதியம்
போட்ட நந்தவனம்...
அழிக்க முடியாத
நினைவுகளாக...
என் இதயத்தில்
என்றும்...
என் எழுதுகோளுக்கு
கவலை இல்லை...
வந்து செல்லும்
உன் நினைவுகளையே
எழுத சொல்கிறது...
என்னை நீ உதறிவிட்டு
சென்ற போதும்...
ஞாபகம் இல்லையோ
என் காதலி.....