ப்ரண்ட்ஸ் - நாகூர் கவி

என்னை நெஞ்சில் தாங்கும்
எந்தன் வானம் நீதான்....
அன்னை என் தந்தை
எந்தன் பூமி நீதான்.....!

மலராக இருந்தோமே
இன்று பூமாலையாய் இணைந்தோமே.....
ஒன்றாக சேர்ந்தோமே
இனி இரண்டாக பார்ப்போமா.....?

எல்லைத் தாண்டி
விரிப்போம் சிறகை...
வெள்ளை மனமாய்
வளர்ப்போம் நட்பை...!

எழுத்து கல்லூரிக்கு வந்தால்
முதலாம் பாடம் நட்பு...
காதல் நீயும் கொண்டால்
உன் கண்ணில் உப்பு....!

சின்ன சின்ன சண்டை
மழலைபோல இடு....
சின்ன சின்ன தூறல்
மழைபோல் விடு...!

கவிதை பக்கம் வந்தால்
கருத்தை கொஞ்சம் கக்கு...
கவிதை பிடிக்கவில்லையென்றால்
அன்று கவியின் தேர்வு டக்கு....!

அலைபேசி உரையாடலில் நீ
முதலில் சொல்லும் சொல்லோ மக்கு...
உன் பேச்சே எனக்கு
மதுவைவிட ரொம்ப கிக்கு...!

கோபம் கொஞ்சம் வந்தால்
புன்சிரிப்பால் மற...
தாகம் தீர்க்கும் நீர்போல்
புதுக்கவிதை தினம் தர....!

விண்ணைத் தாண்டிச் சென்று
புது திரையைத் திற...
பறக்கும் பட்டம்போல
கவிவானில் நாளும் பற...!

எழுதியவர் : நாகூர் கவி (31-Jul-14, 9:49 pm)
பார்வை : 1024

மேலே