பற்றிய வழியினிலே உயர்ந்திடுவர்

​பிறந்திட்ட நிலையால் இந்நிலையா
பிழைத்திட வழிதேடி இக்கலையா !

வறுமைக்கு வயதென்று வரம்பேது
வறியவர்க்கு வளம்பெற வழியேது !

​வாழ்ந்திட வழியென்று வையகத்தில்
வரைந்திட்ட விதிஉண்டா கையளவில் !

உயிர்வாழ உலகினிலே உள்ளவரை
உள்ளதொழிலில் ஒன்று இறுதிவரை !

கற்றிட வழியின்றி உழைத்திடுவர்
பற்றிய வழியினிலே உயர்ந்திடுவர் !

கைவண்ணமே கைத்தொழிலானது
கலைஎண்ணமே கைகொடுக்கிறது !

வலம் வரட்டும் வஞ்சமிலா பிஞ்சுகள்
வளம் பெறட்டும் வளரும் நெஞ்சங்கள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Aug-14, 7:00 am)
பார்வை : 100

மேலே