மண்ணில் தவழும் என் மடி மீன்-போட்டிக்கவிதை
மண்ணில் தவழும் என் மடி மீன்
இரவின் விண்மீன் ஒளிரும் உன் முகமே
கண்டே தினமும் என் நொடி தேயும்
பல நாள் கண்ட கனா தீரும்
விண் மண் ஆளும் அவன் ஒருவன்
என் நெஞ்சம் குளிர வெண்ணுதிரம் தந்தே
அம்மா என்று நீ அழைப்பது கேட்க
இன்னும் கூடுமே என் தாய்மை தாகம்