கிறுக்கனின் கனவுகள் - அரவிந்த்

கனவுகள் பல காண்பதில்
கை தேர்ந்தவன் நான்...

பச்சிளம் வயது முதல்
இப்போது
பருவ வயது வரை
கனவுகளின் கை பிடித்தே
கடந்து வந்தேன்...

பிற கலைஞருக்கு
தட்டப்பட்ட என் கைகள்
ஏக்கம் கொண்டு கனவு கண்டன
எனக்காக சில கைகள்
ஓசை எழுப்பிட வேண்டும் என்று...

பிரபல கவிஞர் இவர்
என்று பெருமை பாடிய
என் உதடுகள்
கண்டன கனவுகள்
நான் அப்பட்டியலில்
இடம் பெறுவதாய் எண்ணி...

பசித்தது
புசித்துவிட்டேன்
தமிழை..

நான் புசித்த தமிழ்
மெல்ல மெல்ல
என் கிறுக்கல்களில் வெளிவர
என் எழுதுகோலும்
கண்டது கனவினை
ஒரு பிரபல கவிஞரின்
எழுதுகோல்
நான் என்று...

இப்படி ஒவ்வொரு கனவுகளும்
என்னுள் ஏக்கங்களை தர
தூக்கமின்றி கிறுக்கினேன்
பல கிறுக்கல்கள்
என் இதயத்துடிப்பை
இசையாய் வைத்து...

இலக்கணத்தை மறைத்து
இதயத்துடிப்பை இணைத்து
வரிகளுக்கு
வடிவம் தருகிறேன் நான்....

எப்பொழுது
என் கனவுகள் வடிவம் பெறும் என்று தெரியாமல்
என் இதயம் துடிக்கும் வரை
கிறுக்கி வைப்போம் என்றெண்ணி
கிறுக்கி கொண்டே இருக்கிறேன்
வெள்ளை காகிதங்களில்...

என்றோ ஒரு நாள்
நான் கிறுக்கிய
வெள்ளை காகிதங்கள்
வண்ண காகிதங்களாய் மாறும்
என்றெண்ணி
கல்லறை செல்லும் வரை
இக்கிறுக்கன் கிறுக்கன்
கிறுக்கி கொண்டே இருப்பேன்...

'இப்படிக்கு இக்கிறுக்கனின் கிறுக்கல்கள்'

எழுதியவர் : அரவிந்த் .C (1-Aug-14, 9:09 pm)
பார்வை : 170

மேலே