அருட்தந்தை சி எம் விக்டர்

கலைகள் நிறைந்து கல் மனதில்
சிற்பம் செதுக்கும் உளியானவர்

இருண்ட மனதில் திரண்ட குறைகள் நீக்கி
இன்பம் தருவிக்கும் ஒளியானவர்

வாரி வழங்கி வற்றாத சுனை நீராய்
வையகம் வாழ துணையானவர்

தோய்வுகள் இல்லாமல் தேய்வுகள் இல்லாமல்
ஆய்வுகள் காண பிறந்த அறிவின் சுடரானவர்

ஏற்றங்கள் கொண்டு மாற்றங்கள் காண
எழுச்சி பாதையின் வழி காட்டுனர்

துணிந்து நிமிர்ந்து நின்று - தன் துயர் மறைத்து
பிறர் துயர் போக்கும் காலைக் கதிரவன் இவர்

வாழ்க வாழ்க என வாழ்த்து பா இசைக்கும்
அருமைச் சகோதரர்கள் வர பிரகாஷ் , ஜேசு பிரகாஷ்

எழுதியவர் : சி .எம் .ஜேசு (1-Aug-14, 10:39 pm)
பார்வை : 973

மேலே