தாய்ப்பால் கட்டிப்போனது

மண்ணில் தவழும் என் மடி மீன்
கண்டால் உரையும் இந்நொடி என் உயிர்
விதியை சொல்லி என்ன பயன் இனி
சதி செய்தது மகளே என் சூழ்நிலை
தட்டி தூங்க வைக்க நீ இல்லை
கட்டிக் கிடக்குதடி செல்வமே நீ பருகிடாது
பிறந்த உன்னை கொன்றனரோ மகளே வாரிசுக்காக
இறந்து வாழ்கிறேனடி இன்னொரு பிள்ளைக்காக அவனோடு

எழுதியவர் : மணிமேகலை.பூ (1-Aug-14, 11:58 pm)
பார்வை : 895

மேலே