நீரோவியம்-வித்யா

நீரோவியம்-வித்யா

நீர் பருகி பசிதீர்ந்த சொற்களெல்லாம்
கவியென கரைகடக்க
பசியாறா சொல்லதுவோ
பாதிவழியில் கிடந்தழுக............

நீர்த்தொட்டே வரைந்திட்ட
இந்நீரோவியம்.........
அவ்வளவு சுகந்தமில்லை என்றாலும்

கோபத்திற்கு சிவப்பையும்
தாபத்திற்கு நீலத்தையும்
நட்புக்கு வெள்ளையையும்
காதலுக்கு பச்சையையும்
தனக்குத்தானே பூசிக்கொண்டு
புன்னகைத்தது..............!

கோபமோ தாபமோ
நட்போ காதலோ
மறு பரிசீலனையில் எல்லாம்
கருமையாகவே ஒட்டிக்கொண்டது...!

இப்படித்தான் எப்போதுமென
பூனையது நெட்டி முறிக்க.........
லாவகமாய் கைகொட்டி சிரிக்கும்
தொலைதூர அருகாமைகள்...........!!

கல்லெறிந்ததும் சலனங்களில்
சிதைந்துபோன இந்நீரோவியத்தின்
வேரறிதல் எளிதன்று.............!



===========================வித்யா

எழுதியவர் : வித்யா (2-Aug-14, 1:03 am)
பார்வை : 120

மேலே