என் நெஞ்சில் நீதானே
பூப்படைந்த நாள் முதலா
காத்திருக்கேன் உனக்காக,
ஆசைகளை பூட்டி வைத்தேன்
என்னவனே உனக்காக...........!
அத்த மக ஆசையெல்லாம்
ஆட்டுக்குட்டி போல,
தத்தித்தாவி நடக்குதடா
காதல் கயித்து மேல...........!
பெத்தவங்க சொன்னாங்க
நீ தான் என் ஜோடின்னு.
ஒருநாளும் கூப்பிடலையே
நீ உரிமையா வாடின்னு...........!
முள்ளின் மீது மாட்டிக்கொண்ட
சேலை நானடா, .
இதை பக்குவமா எடுக்கலைனா
சேதம் தானடா...........!
என் காதல் மழையாகி
உன் மேலே விழவேண்டும்.
உன் காதல் அப்போது
விருட்சமாய் எழவேண்டும்.
வேதனைய மட்டும்
என் நெஞ்சில் தைக்கலாமா,
நெத்தியில ஒத்தப் பொட்டு
வெச்சிவிடு மாமா......
எழுதியவர் :