புது கவிதை

உள்ளதை உள்ளபடியே
உள்ளார்ந்து வெளிக்கொணர்ந்து
சிந்தை தன்னை மேயவிட்டு
வேண்டுமா வேண்டாமா
என்று போராடும் களம் தொட்டு
கவரும் சொல் அமைத்து
அறிவின் யதார்த்தம் பட்டு
இனியவரி பதார்த்தம் சமைத்து
எல்லையற்ற சுதந்திரத்துடன்
புலமையும் செழுமையும் சொட்ட
இலக்கண வேலியில் சிக்காமல்
யாவருமெளிதில் போற்றும் வண்ணம்
என்றும் உணரும் எண்ணம்
என்பது போல் புனைந்தால்
அது தான் புது கவிதை

எழுதியவர் : ரமணி (3-Aug-14, 3:30 pm)
Tanglish : puthu kavithai
பார்வை : 140

மேலே