வைரமுத்து
கறுத்த தோலிலே
கவி நரம்பினால்
யாழ் செய்தே
வைகையின் முத்துக்கு
வைரத்தயே அடைமொழியாய்
நிறுத்துகிறாள்
மதுரை மகள் ஒருத்தி..
வந்தான் வைரமுத்து
"வைகைக்கோர் வானம்பாடியாய்"...
சலனமில்லா சங்கதிக்குள்
சாவு தலையிடாததை
கவிஞன் மட்டுமே
கண்டுணர்கிரானோ?
காலனின் கைகளுக்கு
கிட்டாத தூரத்தில்
உயிரை ஒளித்து கொள்கிறான்
ஒவ்வொரு வார்த்தையிலும்..
கள்ளிக்காட்டு இதிகாசம்
நெருஞ்சியாய் நெஞ்சிரங்க,
கருவாச்சிக் காவியமோ
குருதிக் கத்தியால்
குத்துண்டு குலைக்கிறது...
வைகை படுகையிலே
வற்றுமணல் நாணலும்
வைரனின் வாக்குக்கு
வளைந்து தான் போகிறது..
எழுத்து காந்தத்தால்
இரும்பு மனதை ஈர்த்து
பண்ணையும்,
பெண்ணையும்,
என்னையும் இணைக்கிறான்
பாக்களின் பசையால்...
வரம் ஒன்று கிடைத்தால்
வானவரிடம் வேண்டிக் கொள்வேன்
"சென்மம் ஒன்றேடுத்தால்
வைரமுத்துவின்
வரிகளாய் பிறக்க வேண்டும்" என்று...