தமிழா தமிழா

எந்நாட்டிலும் தமிழருக்கு மதிப்பில்லை
இழிநிலையை மாற்ற ஓர்வழியுமில்லை!
சொன்னாலும் புரியாத இனமானான்
சோற்றுக்கு அலைகின்ற ஜடமானான்

உழைப்புக்கு ஏற்றதோர் ஊதியமில்லை
உதைபடும் தருணத்திற்கு அளவில்லை
பிழைப்புக்கு வழிதெரியாப் பேதையானான்
போதையில் தடுமாறி வீழ்ந்துபோனான்

தன்னாற்றல் வளர்த்திடத் தெரியவில்லை
தகுதியோடு வாழுகின்ற நிலையுமில்லை
சொந்தமொழி உறவுக்கே பகையானான்
வேற்றுமொழி மோகத்திற்கு விலைபோனான்

ஏற்றமிகு வாழ்வுபெறும் நிலையுண்டா?
இனிவரும் தலைமுறைக்கு விடிவுண்டோ?
தூற்றுகின்ற நிலைமாறும் விதியுண்டா?
தொல்புகழை மீட்டெடுக்க வழியுண்டா?

எழுதியவர் : குழலோன் (1-Aug-14, 10:23 pm)
பார்வை : 216

மேலே