சூரியனே -உன்னுடைய நிலா

நான் உன்னை நினைத்து...
இரவில் சிந்திய கண்ணீர்த்துளிகள்..
இன்றும் காயவில்லை...
வானில் நட்சத்திரங்கள்..!

நிலவைப் பார்க்கும்ப் போதெல்லாம்...
உன் நினைவு வரும்..
நீ என் கனவில் வருவாய் என்று...!

நிலவின் ஒளி என்மீதுப் படுகையில்..
நினைவு நட்சத்திரங்கள் மின்னுவதுண்டு..
இருந்தும்....
என்னை சுடுகிறாய் பிரிந்து..
என் சூரியனே..!

அந்த சூரியனைக் கண்டு...
நிலவும் தொலைந்துப்போனது...
வானில்...!

அந்த சூரியன் வந்தும்கூட....
என் சூரியன் வரவில்லையே...
இப்படிக்கு.....
உன்னுடைய நிலா.....!

எழுதியவர் : மணிமேகலைமணி (3-Aug-14, 10:24 pm)
பார்வை : 284

மேலே