ஊன்றுகோலான உற்றன்

..."" ""...

என் நல்ல நண்பனே
நீ எங்கே இருக்கிறாய்
குலம் வேறு குணங்கள் வேறு
குடியிருக்கும் குடிலும் வேறு
நட்பே நீயென் ஆணிவேறு
நீரூற்றி வளர்க்கவில்லை
நீயின்றி நானுமில்லை
இரத்தத்தில் இணையில்லை
ஒற்றை வயிற்றில் நாம்
பிறக்கவில்லை பிரிவினையும்
நமக்கில்லை பிரிந்தால்
நட்பே நாமில்லை
அன்பினை அள்ளித்தரும்
அன்னையாய் பண்பினை
பகிர்ந்தளிக்கும் தந்தையாய்
உறவை வலுப்படுத்தும்
உடன்பிறப்பாய் உயிராய் நீ
சரித்திரத்தின் சான்றாய்
கர்ணனும் துரியோதனும்
சங்க காலத்தின் சாட்சியாய்
ஒளவையும் அதியமானும்
கடந்தகால காட்சியாய்
மார்க்ஸும் ஏஞ்சல்ஸும்
வருங்கால வரலாறாய்
என் நல்ல நண்பனே
நீ எங்கே இருக்கிறாய்,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (3-Aug-14, 8:44 pm)
பார்வை : 85

மேலே