உங்க அன்ப கொஞ்சம் தாங்கடா - இராஜ்குமார்

பூனே போன "அரசியல்" பொடிபயலே
கட்டிட்டு வாடா ஒரு அழகு மயில
கூர்கான் போன "குண்டு" பயலே
புல்லட் வண்டி இனி உன் கையிலே

"பிரபு" தர்ம சங்கடமா இருக்காரு
தினமும் தியானம் பண்ணியே வாழ்றாரு
"கலை"யோட நினைப்பும் போக்கும் சரியல்ல
அவரு பெண்சிலையா போனாலும் தப்பில்ல

"சும்மா" நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு
தினமும் புகைய ஊதுவதே தொழிலாச்சி
"குண்டு மனோஜி"க்கு ஒன்னு செட்டாச்சி
அவன் தலையிலே முடியும் வந்தாச்சி

"மீசை அண்ணன" இன்னும் பாக்கல
அவருக்கு ஜோடி யாருன்னு கேக்கல
"மதி" கதை கதையா எழுதுறான்
ஸ்ரீதிவ்யாவுக்கு இப்போ ஏங்குறான்

சேர்மன் " ஜெய்" பேரு கேட்டு அதிரி போய்
புதுகம்பெனி ஒன்னு வைக்க போறாரு
நல்ல புள்ள "பாலா" பாக்க யாரும் இல்லாம
இன்னும் மடிகணினி உயிர வாங்குறாரு

"குடி" தூர விலகி ஓடிட்டான்
குடியை ஏனோ விட்டுட்டான்
"பாரி"வள்ளல் காலேஜ் பக்கம் காணல
ஹாலிவுட் கதைய இன்னும் விடல

"பெரியவர்" பாதை மாறி போறாரு
காருல மட்டும் வாறாரு
"சித்தப்பு" தலைமறவா எங்கோ இருக்காரு
சிக்னலே இல்லாமல் வாழ்றாரு

"மோகன்" பெருசா ஒன்னு சாதித்து
பெரிய படிப்புக்கு போயிட்டன்
"கவீர் பாய் " ஏசி அறையில் தூங்கிட்டு
வயித்து கடுப்புல மெலிந்சிட்டான்

"கார்த்தி" ஆளே ரொம்ப மாறிட்டு
கயிறு கயிறா அருவியில தாவிட்டான்
" நவின் " ஏதோ ஒன்ன தொலைச்சுட்டு
சமந்தாவ பாக்க கூட மறந்துட்டான்

பொங்கலூர்ல "செல்வா" பேபி இருக்குது
அது போன் பண்ணா மட்டும் சிரிக்குது
"கிருஷ்ணா"யோட லீலை இன்னுமங்கே தொடருது
அதனால அவன் கம்பெனி இன்னும்பெருசா வளருது

"ரோபோ" சிப்ப ரெட்டா மாத்திட்டு
அயல்நாட்டு சதியால் அலையுறான்
ஒத்த அறையிலே ஒடுங்கின சந்தர் "பாலா"
இப்பவும் தனியா இருக்கான் ரொம்ப நாளா

"முத்து" ஊர் ஊரா சுத்துறான்
புரோகிராம் மட்டும் கக்குறான்
ஹோப்ஸ்ல ஒருத்தன் இருக்குறான்
கடவுள கூட மோசமா திட்டுறான்

"சாமி" எங்கோ போறாண்டா
துபாய் அதுக்கு பேராண்டா
எங்க போய் தொலஞ்ச்சிங்கடா
மின் அஞ்சல் ஒன்னு அனுப்புங்கடா

நெஞ்சில் நித்தம் நாம் சிரித்து
நட்பில் நகர்ந்து நாமும் நடமாட
சென்னை பக்கம் வாங்கடா
உங்க அன்ப கொஞ்சம் தாங்கடா

--- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (3-Aug-14, 4:52 pm)
பார்வை : 229

மேலே