நினைவுகளே ஆயிரம் நினைவுகளே

சோப்பு முட்டை மேற் பரப்பு
சொக்க வைக்கும் திரைச் சீலை

வான வண்ணம் யாவையும் - அதில்
வரைந்து பார்க்க ஓவியம்...!!

தூரிகை எனும் என் ரசனை எடுத்து
தூய நினைவை வரைந்து பார்த்தேன்....

குரங்கு மனம் ஏனோ தாவ விரல்கள்
குத்த முட்டை உடைந்ததே........!!

வண்ணம் மீண்டும் திரும்புமோ ? என்
வழி மாறிய நினைவுகளே.....

வருந்தி இப்போது என்ன பயன் ?
வாழும் கலையை மறந்ததேன் ?!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Aug-14, 7:13 am)
பார்வை : 306

மேலே