எனக்கு பிடித்த ஊர்
அல்லி மலரெடுத்து
அசராமல் நான் தொடுத்து
சொல்லிச் சொல்லி தீத்தாலும்
சொல்ல நேரம் போதாதடி -எங்க
சொந்த மண்ணுதானடி!
தரணியில ஒரு பூமியடி -நாங்க
தவமிருந்த பெற்ற சாமியடி
நாடு சொல்லும் ஒரு ஊரடி -அது
நான் பொறந்த தஞ்சாவூரடி!
தமிழைக் மடியில் சுமந்தது
தஞ்சை தமிழ் சங்கமடி
இதில் சோழர்களின்
இலக்கியமும் ஓர் அங்கமடி!
காவிரி நீர் போல
கசியும் இளம் வீரமடி -அங்கே
பூங்காக்களும் சோலைகளும்
பொங்கி வழியும் வனமடி
கண்ணகி இங்கே பிறந்ததினாலே
கோவலம் அவளிடம் மயங்கியதினாலே
காதல் சுரக்கும்
காவிரி நகரமடி -அதில்
கற்பனையைக் கொட்டும்
கவிஞர்கள் ஏராளமடி!
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறமடி
அரசர்கள் பலர்
ஆண்ட நிலமடி!
தஞ்சம் பஞ்சம்
தங்காததால் அது
தஞ்சாவூரடி ஆதலால் எங்களுக்கு
தாய்நாடடி!!