உங்கள் வீட்டு வேலைகாரர்களுக்காக
பணங்களை எதிர்பார்த்து
பிணங்களை தோண்டும்
பைத்தியகாரர்களே!
உங்களின் அரிப்புக்கு ஏழைகளின்
உயிர்களையா சிராய்த்து கொள்வது
நீங்கள் அவர்களை எப்போதும்
நகம் வெட்டும் கருவியாக
நகர்த்தியது போதும்
விரல்களில் அவர்களுக்கும்
விரயம் உண்டு என்று
விளங்கி கொள்ளுங்கள்
அவர்கள் விழிகளுக்கும்
அழவரும் என்று
அறிந்து கொள்ளுங்கள்
அவர்கள் உங்கள்
இல்லங்களை சுத்தப்படுத்தி
உங்களை உயர்த்துகிறார்கள்
நீங்கள் உங்கள்
உள்ளங்களை சுத்தப்படுத்தி
ஏழை என்ற அடிமைத்தனமில்லாமல்
அவர்களை உல்லாசப்படுத்துங்கள்