ஊர் திருவிழா

ஆண்டுக்கொரு முறை நடக்கும்
எங்கள் ஊர் திருவிழாவில்
மூன்று வரிசையில்
அன்னதானம் வழங்கும் நிகழ்வு
அப்போது தான் நடைபெறும்

முதல் வரிசையில்
மேல் சாதிக்காரர்கள்
'டிபன் பாக்ஸ்களோடு'

இரண்டாம் வரிசையில்
நடுத்தர வர்க்கத்தினர்
தூக்குச் சட்டிகளோடு

முன்றாவது வரிசையில்
தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள்
கூஜாவோடும் சொம்புகளோடும்

ஆனாலும் கடைசிவரை
யாருக்கும் தெரியாமல் போனது
அன்னத்தை எந்த சாதிக்காரன்
சமைத்தான் என்று.

எழுதியவர் : (4-Aug-14, 11:01 am)
Tanglish : oor thiruvizaa
பார்வை : 1725

மேலே