வேண்டும் இனம் மானம் மீண்டும்
மழலை மாய்ந்து போனதால்
முலைக்கட்டிய வலியால் தவிக்கும் தாய்
சிங்கள இராணுவத்தால் சிதைக்கப்பட்டு
மலராத மங்கையின் அழுகை
ஆடையெல்லாம் பறிக்கப்பட்டு
அம்மனமாய் கிடக்கும் தமிழர்களாய்
பெண்ணை அடைந்து பெண்குறியில் சுட்ட
சுடுகாட்டு பேய்களே
புதைக்கக் கூட ஆளில்லை
புழுங்கிப் போன உடல்களை
பிறந்த தேதி இடம்
வேறு வேறு என்றாலும்
இருந்த இடம் கருவறைதானே!
பேசும் மொழி இனம்
வேறு வேறு என்றாலும்
எல்லோரும் ஐந்தறிவு ஜீவன்தானே!
அழிக்க பிறந்த ஓரிணமே
அழித்துவிடு எல்லோரையுமே
இல்லையென்றால் இறப்பை நீயும்
இங்கே உணர்ந்திடுவாய்
ஊனமென்றால் வேகம் வேண்டும்
இனமென்றால் மானம் வேண்டும்
'இந்த இனத்திற்கு வேண்டும்
இனம் மானம் வேண்டும்'