ஹார்மோன் படுத்தும் பாடு

காலையில் டியூஷன்
அடுத்து பள்ளி
மாலையில் ஸ்பெஷல் கிளாஸ்
அடுத்து டியூஷன்
இரவு ஹோம்வொர்க்
அதிகாலை ரிவிஷன்
இப்படியே ஓடுகிறது பொழுது..
இதற்க்குள்ளேயும்...
தமாசு, அரட்டை, கேலி, கிண்டல், கோபம், சண்டை, துக்கம், மகிழ்ச்சி, சேட்டை...
அப்பப்பா..
பிரதமரை விட பிஸியான ஷெடியூல்..
இப்படி கெடுபிடியான நேரத்திலும்
எங்கிருந்து துளிர் விடுகிறது காதல்??
ஓ... எல்லாம் ஹார்மோனின் வேலையோ ???
அறிவே இதை அறிந்திடு...
வாழ்வை நீ வென்றிடு...