சிகப்பு விளக்கு

இந்த பெண்மையின் தூக்கம்
மென்மையாய் இதழ்மேல்
இனிமேல் தொடரும் தடை இல்லையே...........

மங்கையர் தம் நெற்றியின் மேலே
குங்குமம் இட்டு -கூந்தலிலே
மல்லிகை சூட தடை இல்லையே .........

இரவென தெரியா(து) தூக்கம் துளைத்து
பகலென தெரியா(து) கண்ணீர் வடித்து
சுயமரியாதை நாளும் இழந்து
சுதந்திரம் அடைந்தேன் இனி தடை இல்லையே.........

சிகப்பெனும் விளக்கை சீக்கிரம் விலக்கு
சீரழிகிறது பெண்குல விளக்கு
சிறையினும் கொடுயது ஆண்களின் பிடியது
சிகப்பெனும் விளக்கை சீக்கிரம் விலக்கு

வாழ்க்கை வாழ பல வழி உண்டு
எவ்வழியேனும் பல வலி உண்டு
வலியின் மருந்தாய் சிரிப்பை உண்டு
வாழ்ந்து பார்ப்போம் அந்த சுகம் கண்டு

எழுதியவர் : kalaiselvi (4-Aug-14, 11:24 pm)
Tanglish : sikappu vilakku
பார்வை : 94

மேலே