விட்டும் கொடுப்பது

..."" விட்டு(ம்) கொடுப்பது ""...

பண்பும் அன்பும் இல்லாமல்
பணத்தால் மட்டும் நாமிங்கு
எல்லாமும் பெற்றிடமுடியாது
பாசமாயிருக்கும் பக்கதுணைக்கு
நெஞ்சோடிருத்தி நேசிப்பவருக்கு
பண்போடு நாமும் பறைசாற்ற
உள்ள அன்பினை வெளிக்காட்ட
சிறியதாய் விட்டுகொடுப்பதிலும்
சுகமுண்டு உண்மை அன்பினை
பகரமாய் நாம் பெறுவதாலே
அதுவே நமக்கு பலநேரம் பெரும்
பாதகமாயும் வருவதுண்டு
விட்டுக்கொடுப்பதின் பொருளிங்கு
நாணயத்தின் இரு முகம்போலே
விட்டு கொடுக்க விட்டுகொடுக்க
விடாமலே பிடித்துக்கொண்டாள்
பின் விட்டு கொடுப்பதுமிங்கு
நமை விட்டுத்தான் போய்விடும்
இதை புரிந்து நடந்துவிட்டால்
வாழ்வில் பயக்க தேவையில்லை

குறிப்பு : -
ஒருவர் விட்டுக்கொடுப்பதை இவன்(ள்)
தனக்கு அடங்கிவிட்டார் என்று தவறாய்
புரிந்துகொள்வதால் வாழ்க்கையே
பிரச்சனையாகிவிடும் அதை தவிர்த்து
விட்டு கொடுப்பதின் உண்மை அன்பை
புரிந்துகொண்டால் இந்த வாழ்க்கை
என்றும் மகிழ்ச்சியாகும்....

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (5-Aug-14, 12:45 pm)
Tanglish : vittum kodupathu
பார்வை : 155

மேலே