சனீஸ்வரன்
சனீஸ்வரன் என்று
நினைத்துவிட்டாள் என்னை !
உண்மைதான் ஏழரை
ஆண்டுகள் முடிந்துவிட்டது
இன்றோடு !
உன்னை இனியும் தொடர்ந்தால்
ஜென்ம சனி ஆகிவிடுவேன் நான் !
செல்கிறேன் உனக்காக
உன்னைத் தொடராமல் !
நீயாவது மகிழ்வோடு வாழ்
மறந்துகூட வரமாட்டேன் இனியும்
உன் வாழ்க்கையில் !