காதலாய் வாழ்ந்தேன்

அழைத்தேன் நின்றாய் பார்த்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்

மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்

மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்

சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்

எழுதியவர் : கே இனியவன் (5-Aug-14, 9:31 pm)
பார்வை : 86

மேலே