காத்திருபதர்காகவே காத்திருகிறேனடி நான் 555

என்னவளே...

என்னை கடக்கும்
ஒவ்வொரு நொடியும்...

நான் உனக்காக
காத்திருக்கிறேன்...

என் விழி என்னும் வாசலில்
ஆனந்த கண்ணீரோடு...

நீ காத்திருக்க சொல்வாய்
என்றும் காத்திருக்கிறேன்...

தினம் உன் நிழலாய்
நான் வருவது...

உன்னை கட்டாய
படுத்த அல்ல...

என் காதலை உனக்கு
புரிய வைக்கவே...

நான் கசக்கிய காகிதங்கள்
கூட கர்வம் கொள்கிறது...

உன் பெயர் அதில்
இருப்பதால்...

சில நேரங்களில் மரித்துவிட
நினைக்கிறன்...

உன் மடி என்றால் இப்போதே
சம்மதம் தானடி எனக்கு...

தினம் தினம்
உன்னை காணவே...

நான் ஆலயங்களுக்கு
செல்கிறேன்...

உன்னை காணாத நாட்களில்
கடவுளிடம் கேட்கிறேன்...

மாலை நேரம் முடிவதற்குள்
உன்னை காணவேண்டுமென்று...

ஒருமுறை என் கண்களை
பார்த்து உதிர்துவிடுவாயா...

உன் காதல்
மொழிகளை...

காத்திருகிறேனடி எப்போதும்
நான் உன்னை நினைத்தே...

உனக்காகவே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Aug-14, 8:49 pm)
பார்வை : 2426

மேலே