மழை

உலகம் முழுமைக்கும்
ஒரே மொழி
மழை;

எடுப்பார் யாருமில்லை
முத்துக்களை வீசிச்சென்றது
மழை;

மண்ணில்
வான் எழுதும்
கவிதை
மழை;

கோடை நிலவை
குட்டையில் விட்டுவிட்டு
சென்றது
மழை;

எழுதியவர் : பசப்பி (6-Aug-14, 10:14 am)
Tanglish : mazhai
பார்வை : 188

மேலே