தாமரை குயில் மழலை

இதழ் விரிக்கும்
தாமரைக்கு
இலக்கியம் தெரியாது
கதிர் விரிக்கும்
திசையில் அவள்
மடல் விரிப்பதெல்லாம்
கவிதை !

கூக்கூ என்று கூவும்
இளவேனிற் குயிலுக்கு
இசை தெரியாது
மலர் தோட்ட தென்றலுக்கு
அவள் பாடுவதெல்லாம்
இசை !

தத்துப் பித்தென்று
சொல்லும் மழலைக்கு
மொழி தெரியாது
அள்ளி எடுத்து முத்தமிடும்
அன்னைக்கு அது சொல்வதெல்லாம்
இனிமை !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-14, 10:38 am)
பார்வை : 156

மேலே