இருப்பேனடி நானும் உன்னை நினைக்காமலே 555

பெண்ணே...

நீ சுவாசிக்கும்
உன் மூச்சு காற்று...

என்மேல் பட வேண்டும்...

உன் சுவாசத்தில்
என் ஜீவன் வாழ வேண்டும்...

வினாடியாவது...

என்னைவிட்டு என் உயிர்
பிரிந்து போனாலும்...

என் நினைவுகள் உன்னை
வாழ்த்த வேண்டும்...

கடற்கரையில்
யாரும் இல்லாமல்...

ஒதுங்கி நிற்கும்
படகை போல...

என்னை நான்
உணர்கிறேனடி...

என்னோடு நீ இல்லாத
இந்த நாட்களில்...

முழுவதும் என்னை
வெறுத்துவிட்டேன்
என்கிறாயடி நீ...

முடியவில்லையடி என்னால்
உன்னை போல...

வளராத பிறை
பூக்காத மலர்...

அலைகளின்றி கடல்
உதிக்காத சூரியனும்
இருக்குமென்றால்...

இருப்பேனடி நானும்
உன்னை நினைக்காமலே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Aug-14, 8:22 pm)
பார்வை : 462

மேலே