பாரதியார் தெரு
மாலை நேர நடை பயணம் ....
நானும் , என் வீதியும் ,
கொஞ்சம் மரங்களும் .
பெரியவர்கள் ,
குலம் விசாரிக்கும் பெண்கள் ,
விளையாடும் குழந்தைகள் ...
இவர்கள் எல்லாம் எங்கே ??
குழந்தைகள் சீண்டாத
செத்த வீதி !
"காலை முழுதும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு "
என்று சொன்னவர்
பெயர் பலகை மட்டும்
மிச்சம் .
லக்ஷ்மி பாலா