காணாத தந்தையே

""சிறு வயதிலேயே தந்தையை
இழந்த பிள்ளையின் தவிப்பு
என்னைப்போல் உள்ளவர்க்கு
சமர்ப்பணம் செய்கின்றேன்""
தந்தையர்தின கவிதையாய்
..."" காணாத தந்தையே ""...
உன்னை பற்றி சொல்லிட
என்ன உண்டு என்னிடம்
உன் கரம் பற்றி நடக்காத
இந்த உலக வாழ்க்கையிலே
நீயில்லை என்னோடு உன்
நினைவுமில்லை நெஞ்சோடு
கண்களை கண்ணீர் மறைத்து
நிற்க கவிதருவது எப்படியோ!!??
நான் கருவில் இருக்கும்போதே
காற்றாய் நீ மறைந்துவிட்டாய்
தந்தையோடு கல்விபோகும்
நான் கற்கவில்லை என்பதற்கு
நீயும் ஒரு காரணமோ நான்
மண்ணுலகம் காணுமுன்னே நீ
கண்ணைவிட்டு மறைந்ததாலே
என் ஒவ்வொரு செய்கையிலும்
தந்தையை காணும் அன்னை
அவள் கண்ணீரிலேயே உனை
அதிகமாய் கண்டுகொண்டேன்
அவளுக்கு ஆறுதலாய் நான்
என்னை அரவணைக்க யார்?
தினம்வைத்து நினைக்கும் உலகில்
இன்று தந்தையர் தினமாம்
யாருக்கு தெரியும் உன்னை
தினம் தினம் நினைத்து என்
நெஞ்சுருகும் வேதனைகள்,,,
தந்தை(யாகி)யின்றி அனாதையாய்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...