சுமையல்ல இதுதான் சுகம்

... சுமையல்ல இதுதான் சுகம் ""...
புன்னகையின் தேசத்து
பூக்கள் நாங்கள்
பூரித்து மகிழ்கிறோம்
தாய் சேயென்று
உன் மாரொடும்
தோளோடும் மகிழ்ந்து
நீ தாயாகியெனை
சுமந்திருந்தாய் அன்று
உன்னை சேயாக்கி
சுமக்கின்றேன் இன்று
இங்கணம் சுமைகள்
என்னவே ஒன்றுதான்
அதனின் சுகங்கள்
மட்டும் மாறுபடுகின்றது
மடிமீது எனைவைதே
மாரோடு பாலூட்டியே
தாலாட்டு பாடியே
எனை உறங்கவைத்தாய்
ஊண் உறக்கம் மறந்தாய்
உந்தன் ஊன்று கோலானேன்
பேர் சொல்லும் சொந்தம்யாவும்
நீ பெற்றெடுத்த சொந்தமாகா
எனை நீ பெற்றெடுத்ததைவிட
உனைனான் பெற்றதே ஆனந்தம் ,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....