அம்மாவின் பிள்ளை

நிலவே உனக்கு சோரூட்ட...
தாய்மை இங்கு பசியாருதே...!
உன்னை அழவைத்து ரசிக்க ஆசைதான்...
என் கண்ணீரை நீ துடைத்திடுவாய்..
அதனால்...
ஆசைக்கொள்வேன் நான் அழுதிட....!
உனக்காய் பாட்டிசைத்தேன் உறங்கிட...
உடனிசைப்பாய் நானுறங்கிட...!
நீ செய்யும் குரும்பிற்காய்....
உன் கன்னங்களை கடித்திட...
"வலிக்குது அம்மா"ன்னு.....
நீயும் சொல்லிட துடித்திடுவேன்.....!
நீ சிரித்திட....
கை தட்டும் இமையே...!
நீ கை தட்டி உள்ளங்கை சிவந்திடவே....
திடித்திடும் இவள் உள்ளமே...!
நீ விழுந்திட ஓடிவரும் கால்கள்....!
நீ அழைத்திட தேடிவரும் தாய்மை...!
பாலூட்ட தேனானாய் இம்மலரில்...
உதிர்ந்து விழும் என் நாட்கள்...
நாளை பூக்கும் உன் மலர்களுக்கு...
வாசம் சேர்ப்பேன்...
இந்த தாய்மையை அறிவாயோ....!!!.