சிறந்த கவிதை
மூன்றெழுத்தில்
கவிதை தேடி அலைந்தேன்..!
60 வயது எட்டியவரை கேட்டேன்
வாழ்வு என்றார்.
30 வயது எட்டியவரை கேட்டேன்
பணம் என்றார்.
15 வயது எட்டியவரை கேட்டேன்
கல்வி என்றார்.
7 வயது எட்டியவரை கேட்டேன்
நட்பு என்றார்.
3 வயது குழந்தையை கேட்டேன்
அம்மா என்றது- உலகில்
மிக சிறந்த கவிதை இதுவே.
ஏனெனில் ?
அம்மாவில் இருந்துதான்
இவையாவும் பிறபெடுகின்றன.