தாய்மையும் தாய்ப்பாலும்
தாயே !
மண்ணில் தோன்றிய கடவுளும் உன்னால் உதயம் ஆனார்
மண்ணில் மனிதனாக
மண்ணில் பிறப்பதற்காக உன்னில் விதைக்க பட்டேன்
உனக்குள் நானாக
உன் தூக்கங்கள் விலக்கி என் துயரங்கள் தடுத்தாய்
என்றென்றும் என் தாயாக
நீ நடக்கும் பாதையில் முட்களை அமைத்தாய்
நான் நடக்கும் பாதை முத்தாக இருக்க
ஆயிரம் கோடி யுத்தங்கள் வென்றாலும் ஆணினம்
அமர முடியாத அரியாசனம்
அது தாய்மை என்னும் சிம்மாசனம்
பத்து மாத சுமை பெற்று
பெண்மையின் முழு குணம் பெற்றாய்
உன் காலடி செருப்பாக வேண்டும்
என்னை சுமந்த உன்னை சுமக்க
தாயே ! என் நினைவுகள் உன்னோடு இருக்க
என் நிமிடங்கள் உனக்காக வேண்டும்
பண்டைய தமிழ் மண்ணின் வீரம் தெரியுமா
தாய் பாலின் பெருமை அதே தான்
குழந்தைக்கு மருந்தை விட ஒன்று
தாய்பால் என இனம் கண்டு
உலக தயார் தரனும் குழந்தைக்கு தாய் பால் இன்றும்