ஏணிகள்

இன்று நான் +2 வில் ,எனக்கு தமிழ் பயிற்றுவித்த தமிழாசிரியரை (திரு . இளங்கோவன்) அவர்களை சந்தித்தேன். +2 வில் எங்கள் பள்ளியில் நான் தமிழில் முதல் மதிப்பெண் பெற அவரது பாடம் கற்பிக்கும் திறனே காரணம். சுவாரசியமாய் ஒரு விசயத்தை விளக்கும் விதமும் ATHAI KATRU KOLVATHIL AARVATHAI எர்ப்படுதியிருக்கும் என எண்ணுகிறேன்.
15 வருடங்கள் கடந்துவிட்டாலும் அவரை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.
அவர் நடத்திய தமிழ் உரைநடைகள் , செய்யுள்கள் எல்லாம் என் மனகண்ணில் ஒரு நிமிடம் ஓடி மறைந்தன.சிலப்பதிகாரம், நெடுநல்வாடை பாடலை அவர் படித்து காட்டி விளக்கும் விதம், அந்த வகுப்பு முடியாமல் தொடராத என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் . வேலியில் மலரும் பீர்க்கம் பூக்களை பற்றி கூறும் போதும், கூதிர் காலத்தில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நிலையை விளக்கும் போதும், குளிர், காலத்தில் வீட்டில் வெயிலுக்கு உபயோகிக்கும் விசிறிகள் சுவர்களில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை விளக்கும் போதும் , பிச்சி முல்லை , மல்லி பூக்கள் விரிவதையும், சந்தனம் , அகில் மரக்கட்டைகளைகொண்டு வீட்டிற்க்குள் வாசனை புகை பரவவிடுதலையும் , மழை நீர் வீதியில் உள்ள எல்லா பொருள்களையும் தன்னோடு சேர்த்து கொண்டு , துளசி செடிகளையும் வேரோடு பிடுங்கி இழுத்துக்கொண்டு எருமைகள் படுத்திருக்கும் குளத்தை போய் சேர்ந்தது.
அவர் இன்றும் தமிழாசிரியராக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். ஆசிரியர்கள் என்றும் ஏணிகளாகவே இருகிறார்கள். நம்மை வாழ்வின் படிகளில் அழகாய் ஏற்றி விட்டு பார்ப்பவர்கள்.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (7-Aug-14, 12:01 pm)
Tanglish : ENikal
பார்வை : 66

மேலே