எழுத்தாளனின் சாதனை

எழுத்துக்கள்
தேசத்தை காப்பாற்றுகிறது .
எழுதியவனை
கைவிட்டு விடுகிறது.

கைவிடப்பட்ட நான்
எழுத்தில் கம்முயுனிசத்தோடும்...
வாழ்வில் முதலாளித்துவத்தோடும்
காக்டெயில் வாழ்க்கை கற்று
காப்பாற்றிக்கொண்டேன் எனை.

என்னுடைய எழுத்துக்கள்
எல்லாமே
மண்டியிடாத மன்னிப்பு
கோரல்கள்தான் ?!

சமூகத்தை பார்த்து
அழுதேன்.
சமூகம் என்னை
உற்றுப்பார்த்து
சிரித்தபடியே
சென்று கொண்டிருக்கிறது.

அந்த சிரிப்பு
மன்னிப்பா?
தண்டணையா?

எழுதியவர் : ராம்வசந்த் (7-Aug-14, 11:43 am)
பார்வை : 95

மேலே