என்னை ஏற்றுக்கொள் மனமே

நிலவே!
நீயும், நானும் ஒரே கோலம் தான்!
ஆனால்...
உன்னை ரசிக்கும் கண்கள்
என்னை வெறுக்கிறதே!
உன்னை புகழும் வாய்
என்னை தூற்றுகிறதே!
நீ தோன்றினால் நல்ல நேரம் ஆரம்பித்துவிடுமாம்
நான் தோன்றினால் அபசகுணம் ஆரம்பமாகி விடுமாம்..
நான் என் கணவனை விழுங்கிவிட்டேனாம்
நீயும் தான் சூரியனை விழுங்குகிறாய்..
அது ஏனோ?
என்னை மட்டும் யாருக்கும் பிடிப்பதில்லை!
நீயும் பூலோகத்தில் இருந்திருந்தால்
இதே நிலைமைதான் உனக்கும் நேர்ந்திருக்குமோ!!!

எழுதியவர் : த. சுகந்தி (7-Aug-14, 11:13 am)
பார்வை : 118

மேலே