பார்வையால் கடத்துகிறாய் என்னை
என்ன பார்வையடி உன்தன் பார்வை !!!!!!!!
ஊரில் உள்ள எல்லா மின்சாரத்தையும்
பதுக்கிவைத்திருக்கிறார்கள் போல ,
உன் "கண் பார்வையில்"
உன் பார்வை என்மேல் பட்டவுடன்
இழந்துவிட்டேன் .....என் பார்வையை
விடியாத இரவாக இருந்த என் கண்களில்
இரவில் தெரியும் நிலவின் ஒளியாய்
கிடைத்தது "உன் பார்வை"
தினமும் மறுபிறவிதான் எனக்கு
உன் ஓரபார்வை என்மீது படும்போது
உன் பார்வையை பார்க்க முடியாமல்
சூரியனுக்கும் கண் கூசுகிறதா,,,
பலரை தீண்டாத உன் பார்வை
ஏன் என்னுள் மட்டும் பெரிய யுத்தம் நடத்துகிறது.....???
உன் பார்வையால்
என்னை உன் இதயசிறையில் அடைத்தாயே
எப்பொழுது விடுதலை செய்வாய்....
நீ பேச மறந்த வார்த்தைகளை
உன் பார்வை பேசுகிறது என்னிடம்
என் வெற்று இதயத்தில்
ஏழு கோடி கவிதை எழுதுகிறது
என் ஒற்றை பார்வை ....
என்னை வசீயபடுத்தி இழக்கும்
உன் பார்வையில் என்ன
காந்தசக்தி இருக்கிறதா??????
உன் பார்வை என்னும் வரத்தில்
சாபமானது ---என் வாழ்க்கை
உன் பார்வை காட்டும் திசையில்தான் செல்கிறேன்
உன் காதல் அங்கே இருக்கும்
என்ற "நம்பிக்கையில்",...............!!!!!!!
#காதலில் விழவில்லை
காதலிக்க ஆசையில்லை#