வரம்
அறுந்து விட்ட பட்டமாய்
அந்தரத்தில் பறக்கிறேன்
முகம் முறித்து கொண்டுபோன
உன்
மூன்று நிமிட கோபத்தில்....!!
எட்டிபிடித்துவிட எத்தனிக்கிறேன்
உன் கூந்தலின் வாசத்தை
அத்தனைக்கும் முந்திக்கொண்டு
அழகாய் அமர்ந்துவிடுகிறது
பூவும்
தென்றலின் வாசத்தோடு.....!!
எவ்வேளையிலும்
அஸ்தமனமாகாத
ஒளியின் பிம்பமாய்
உன் முகம்......!!!
உன்னை ரசிக்கும் இரவாய்
உன்னை சுகிக்கும் வெயிலாய்
எப்போதும் இடைவெளியில்லாமல்
உன் இடையாடும் நூலாக
வரம் கொடு......!!!!
கவிதாயினி நிலாபாரதி