என் அப்பன்

என் அப்பன்
உன் விரலுக்குள் என் வாழ்வு…
எனது நடைவண்டி நீ…
கரிசன களிம்புக்காரன் நீ…
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்

நடைவண்டியில் இருந்து தடுமாறி விழுந்தேன்… நீ அழுதாய்
நானோ சிரித்தேன், குழந்தையாய்…
நீ அழுவதைப் பார்த்து மேலும் சிரித்தேன்
நான் சிரிப்பதைப் பார்த்து நீ மேலும் அழுதாய்… எனக்காய்

நானோ தமிழ்ச்சித்தன்… நீயோ என் பித்தன்…
நீ அருகில் இருக்கும் போதெல்லாம் கையெழுத்திட்டேன் ஆங்கிலத்தில்
நீ சுற்றியுள்ளவர்களை ஒரு சுற்று பார்ப்பாய் பெருமிதமாய்…
‘ஏ மவே பெரிய ஆள்ரா…’ என்றது அந்த பெருமிதம்

நான் பணிப்புரியும் இடத்தைப் பார்க்க விரும்பினாய்
அழைத்து வந்தேன், முகம் சுருக்கினாய்… கவனித்தேன்.
பொரோமஷன் என்ற பொய்யைச் சொல்லி மீண்டும்
அழைத்து வந்தேன், ஊரையே அமர்களப்படுத்தினாய்…
நான் அழைத்து போனது நட்சத்திர விடுதிக்கு…
நான் வைத்திருந்தது நண்பனின் கணினி…


கடவுளிடம்…
நீ ‘கருப்பா அடுத்த ஜென்மத்துலயும் ஏ மவந்தே எனக்கு மகனா வரனும்’
நான் ‘கருப்பா அடுத்த ஜென்மத்துலயும் நானே இவருக்கு மகனா பொறக்கனூ’
உன்னோட இந்த ஆசையாவது நிறைவேறட்டும் என்பதற்காக வேண்டினேன்…

என் அப்பனே…
நடையா நீ நடந்து சம்பாதிச்சது எதுக்காக…?
எனக்கு சைக்கிள் வாங்குவதற்காக…

என்னிடம் ஒரு முறைகூட கஷ்டத்தை சொன்னதில்லேயே…
எனக்கு கஷ்டம் என்றால் உன்னை தவிர வேறாருமில்லையே…

புது வேட்டி புது சட்டை எடுத்து வருகிறேன்… உனக்காக…
அணிந்து கொண்டு ஊர் மந்தையில் நீ உக்கார வேண்டும்…
அரசனாக எனக்கு தெரிய வேண்டும்…

எழுதியவர் : இராசா (9-Aug-14, 2:58 pm)
Tanglish : en appan
பார்வை : 87

மேலே