பினிக்ஸ் பறவை
விட்டில் பூச்சி என நினைத்து நெருங்கினாய்
தேனொழுகும் வார்த்தைகளால் சீண்டினாய்
உலக மாயைகளை கொண்டு ஜாலம் காட்டினாய்
மயக்கும் ஆசை வார்த்தைகளை கொண்டு தூண்டினாய்
உன் அருவருப்பான இச்சைகளை கடை விரித்தாய்
மறந்துவிட்டாய்
நான் தூய்மையின் கரங்களில் இருந்து
பறந்து வந்த பினிக்ஸ் பறவை என்று !!
தொட்டால் சாம்பலாவாய்
நினைத்தால் அதிசயப்பட்டு போவாய்
விலகி நில்!!
தூய்மையின் கரங்களின் தீ நாவுகளால்
உண்டானவள் நான்
இருளுக்கும் ஒளிக்கும் சம்பந்தம் ஏது ??
நீரோடைக்கும் கழிவு நீருக்கும் உறவு ஏது ??
ஒளியை நோக்கி வா
உன் இருள் மறையும்
நீரோடையில் உன்னை கழுவு
உன் நாற்றம் நீங்கும் ...
நல்லன நினை
நல்லன பெறு !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
