அறுபத்து
![](https://eluthu.com/images/loading.gif)
காமம் இல்லாக்
காதல் வேண்டுகிறேன்;
மோகமில்லா
முத்தம் வேண்டுகிறேன்;
அடக்குதலில்லா
அன்பு வேண்டுகிறேன்;
பரிதாபமற்ற
பாசம் வேண்டுகிறேன்;
கோபமற்ற
கொண்டாட்டம் வேண்டுகிறேன்;
வெருமையற்ற
விடியல் வேண்டுகிறேன்;
ஆறுதலுடன்
அரவணைப்பை வேண்டுகிறேன்;
நம்பிகையுடன்
நல் நட்பை வேண்டுகிறேன்;
செல்லமான
சிறு ஊடல்களை வேண்டுகிறேன்;
அழுகையோடு கூடிய
அழகிய கூடலையும் வேண்டுகிறேன்-என்
அறுப(த்)துகளில்!!