இரவல்
குழல் மணக்கப் பூச்சூடி
முகமலர்ந்த சிரிப்போடு
கைவளைத் தாளமிட
கால்கொலுசு நடனமாட
இடைக் கூறை மணக்க
மகளாய் இருந்த என்னை
மணமகளாய் மருமகளாய் அனுப்பினார்
(என்) அப்பா மறுவீட்டிற்கு;
இலவசமாய் அல்ல-இரவலாய் வாங்கிய
இரு லட்ச ரூபாய் நோட்டுக்களோடு...!!