ஆடி ஆதாயம்

ஆடி மாதம்
தலைவனோருவன்
தன்னில் பாதியை தாய் வீட்டிற்கு
சென்றதால்
தனிமையில் தண்ணீர்
சிந்தினான் மனக்கண்களில்
மோகத்தால்

மேகம் கருப்பது கண்டு
தனக்கு துணையாய் வானும்
கண்ணீர் சிந்த போவதாய் எண்ண

தலைவி அவளும்
தன்னவனை எண்ணி
தனிமையில் கண்களில்
கனவுகளை சுமக்க செய்துக்
கொண்டிருந்தாள்

மாப்பிள்ளை வீட்டார்
ஆடி ஆஃபர் கொடுத்தும்
தல ஆடிக்கு வந்த மகளுக்கு
சீர் செய்ய முடியாத
வீணாய் போன விவசாயி
தந்தை ஒருவன்
தல தீபாவளிக்காவது
சீர்வரிசைகளை சீராக செய்ய எண்ணி
ஏக்கத்தோடு,
"தலைவன் தன் மனக்கவலைக்கு
துணை வர போவதாய் எண்ணிய",
வானை வெறித்து பார்த்து
கொண்டிருக்க வானில் விண்மீன்கள்
வாசம் இல்லை "ஒரு வேளை
தலை ஆடிக்கு அவையும் அம்மா
வீட்டிற்கு சென்றிருக்கும் போல", அப்ப
நிச்சயம் வானம் மேக கண்களில்
வருத்த கீதம் படும் என எண்ணிய
போது கன்னத்தில் முத்தமொன்றையிட்டது
மழைத்துளி ஒன்று

ஆனந்தக் கூத்தாட
ஆவலாய் காத்திருந்த கழனிக்காரனுக்கு
கப்சா கொடுத்தது வான்மேகம்...

இங்கு மோகமுண்டு(ஆசையுண்டு)
மேகமுண்டு, போகந்தான் இல்லை

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (11-Aug-14, 5:21 am)
Tanglish : aadi aathaayam
பார்வை : 113

மேலே