என் படைப்பு

என் படைப்பு
புது கவிதை
பழைய கவிதை
மரபுக் கவிதை
எந்தக் கவிதையும்
எனக்கெழுதத் தெரியாது.
சிந்தனையில் பளிச்சிடுவதை
எழுத்தில் வடிக்க
நானெடுக்கும் நேரம்
ஒருசில நிமிடங்களே
நேரத்தைச் செலவழித்து
சொற்களைத் தேடி
சேர்த்து, கோர்த்து
அடித்து திருத்தி
கவிதயைப் படைத்திட
எனக்கில்லை பொறுமை
முழுமையைப் பெறும்நிலை
மானிடர் எவர்க்குமில்லை
என்படைப்பும் அப்படியே
அரைகுறையாய் நிற்கும்.